Wednesday, 18 December 2013

Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women

Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women 5 பெண்களை கொன்ற காமக் கொடூரனுக்கு 5 ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்டு தீர்ப்பு Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women

புதுக்கோட்டை, டிச.19-

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் வேலுஅம்பலம் மகன் குப்புசாமி (வயது 36). இவர், கடந்த 9.4.2009-ந் தேதியன்று அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நமணசமுத்திரம் அருகில் உள்ள தெற்கு தாளம்பட்டியை சேர்ந்த அஞ்சலை(19) என்ற பெண்ணின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து 17.5.2009-ந் தேதி உடையாளிப்பட்டி அருகே உள்ள சாத்தினிபட்டியை சேர்ந்த செல்வம் என்கிற செல்லம்மாள் (65) என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த 3 கிராம் தோடு மற்றும் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் 5.6.2009-ந் தேதி விராலிமலை கோட்டைகாரன்பட்டியை சேர்ந்த வள்ளிக்கண்ணு(38) என்ற பெண் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, அவரை கற்பழித்து கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும் புத்தாம்பூரை சேர்ந்த திருவாயி (40) என்ற பெண் அருகில் இருந்த குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றபோது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 8 கிராம் தங்க சங்கிலியை பறித்ததோடு, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். அன்றைய தினமே புத்தாம்பூரை சேர்ந்த கருப்பாயி (70) என்ற மூதாட்டி புத்தாம்பூர் தபால் நிலையத்தில் இருந்து ரூ.400 பணத்தை எடுத்துக்கொண்டு நடந்து வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை வழிமறித்து, அவர் கையில் இருந்த ரூ.400 பணத்தை பறித்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த 5 கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குப்புசாமியை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் நேற்று தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், 5 கொலை செய்த குற்றத்திற்காக குப்புசாமிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 5 ஆயுள் தண்டணையும், கொலை மற்றும் கற்பழிப்பிற்கு தலா 10 வருட சிறை தண்டனையும் மற்றும் அபராத தொகையாக மொத்தம் ரூ.11 ஆயிரமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
...

No comments:

Post a Comment

Popular Posts